தேனி
தேனி மாவட்ட பள்ளி மாணவி களுக்கு இடையிலான வாலிபால்போட்டி கம்பம் சிபியு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், 19வயதுக்குட்பட்ட பிரிவில் 8 அணி கள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி, வைகை அணை எஸ்எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை வென்று மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடித்தது. இதன்மூலம் அப்பள்ளி மாணவிகள் அணி, மாநில வாலிபால் போட்டிக்குத் தகுதி பெற்றது. கள்ளர்சீரமைப்புப் பள்ளிகளில் இருந்துமாணவிகள் அணி மாநில வாலிபால் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறை.
வெற்றி பெற்ற மாணவிகளை கள்ளர் சீரமைப்புத் துறை இணைஇயக்குநர் குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகாதேவி, உத்தமபாளையம் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பதி, மாவட்ட உடற்கல்வியியல் ஆய்வாளர் (பொறுப்பு) இளங்கோவன், பள்ளியின் தலைமை ஆசிரியர் விக்ரமன் ஆகியோர் வாழ்த்தினர்.
WRITE A COMMENT