புனித அந்தோணியார் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்


புனித அந்தோணியார் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர்படை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமை தேசிய மாணவர் படை கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரிஸ் பர்தான் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டனர். தனியார் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ராம் குமார், ரிஷிகுப்தா, பூஜா குப்தா ஆகியோர் கலந்துகொண்டு கண்பரிசோதனை செய்தனர். பார்வை குறைபாடு உள்ளவர்களை இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்தனர்.

இந்த முகாமல் 250 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தேசிய மாணவ படைஅலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் கூறுகையில், ‘‘இளம்வயதிலேயே மாணவர்களுக்கு பெரியவர்களுக்கு உதவ வேண்டும், சேவை மனப்பான்மை உள்ளம் கொண்டவர்களாக வளர வேண்டும் என்ற நோக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியில், தாளாளர் ததேயுபால்ராஜ், தலைமை ஆசிரியை அமலோற்பவ மேரி, ராணுவ வீரர்கள் மூர்த்தி,பல்வான்சிங், மணிகண்டன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x