வேலூர்
'இந்து தமிழ் திசை நாளிதழ்' மற்றும்நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பாக ஊழல் ஒழிப்பு குறித்து நடந்தமாநில அளவிலான ஓவியப்போட்டி யில் வேலூர் மாவட்டம் ஆம்பூர்ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவர் ராகுல் ஜூனியர் பிரிவில் முதல் பரிசு பெற்றார்.
இந்நிலையில் பள்ளிக்கு திங்கள்கிழமை வருகை தந்த வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராணி ஓவியப் போட்டியில் மாநிலஅளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்ராகுலுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் குமரகுரு பாரதி,ஆசிரியர்கள் உடனிருந்தனர்
WRITE A COMMENT