திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளில் 'தமிழ்நாடு தினம்' கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழர்களின் பெருமையை உணர்த்தும் கீழடி தமிழர் வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி 1956-ம்ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா பிரிக்கப்பட்டு தனிமாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நாளை தமிழகம் உருவான தினமாக கொண்டாட வேண்டும் என்று தமிழறிஞர்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, நடப்பாண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்து, நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாட உத்தரவிட்டது.
சிறப்பு நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் தொன்மை குறித்த பேச்சுப் போட்டி உட்பட சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, திருப்பூர் செல்லம்மாள் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 'தமிழ்நாடு நாள்’ தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் வே.நாகராஜ் கணேஷ்குமார், 'மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறித்தும், தமிழ்மொழியை செம் மொழி என உலகம் முழுவதும் போற்றுவதற்கான காரணத்தையும் விளக்கினார். 2600 ஆண்டுகள் பழமையானதுமேலும் தற்போது கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த தமிழில் எழுத்துப் பொறிப்பு பானைகளே சான்று' என எடுத்துரைத்தார். இதேபோல் காங்கேயம் அருகே பழையகோட்டைபுதூர் அரசு பள்ளி, திருப்பூர் சிங்கனூர் தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் தமிழ்நாடு நாள் தினம் கொண்டாட்டப்பட்டது.
WRITE A COMMENT