தக்கர் பாபா வித்யாலயாவில் படேலின் 144-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


தக்கர் பாபா வித்யாலயாவில் படேலின் 144-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சென்னை

தி.நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் படேலின் 144-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் விழா சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தக்கர் பாபா வித்யாலயா சமிதியின் தலைவரும், மூத்த காந்தியவாதியுமான எஸ்.பாண்டியன் தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, "குஜராத் மாநிலத்தில் இருந்து இந்தியாவுக்கு கிடைத்த மாணிக்கம் படேல். அவர் காந்தியின் ஒவ்வொரு வார்த்தையையும் பின்பற்றினார். இறுதிவரை விவசாயியாக இருந்து விவசாயிகளின் நலனுக்காகப் போராடினார்" என்றார்.

முன்னதாக, சடாச்சரம் வரவேற்றார். படேலின் படத்துக்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தீபக், கேசவன் ஆகியோர் படேலின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினர். பின்னர் அனைவரும் தேசிய ஒற்றுமைக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். நிறைவாக, ராஜா நன்றி கூறினார்.

FOLLOW US

WRITE A COMMENT

x