அரியலூர்
அரியலூரை அடுத்த கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சிக்கன மற்றும் சேமிப்பு தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இதில், கட்டுரை, பேச்சு மற்றும்ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி பரிசுகளைவழங்கினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசும்போது, சேமிப்பின் அவசியம் குறித்து விளக்கினார். முன்னதாக, அனைவரும் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தீபக், ராஜராஜ சோழன், சாந்தி, பாரதி, துர்கா, சர்மிளா, கவிதா ஆகியோர் செய்தி ருந்தனர்.
WRITE A COMMENT