கோவை மாவட்ட கூடைப்பந்து போட்டி: அல்வேர்னியா கான்வென்ட் பள்ளி மாணவிகள் சாம்பியன்


கோவை மாவட்ட கூடைப்பந்து போட்டி: அல்வேர்னியா கான்வென்ட் பள்ளி மாணவிகள் சாம்பியன்

கோவை

கோவை மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில், அல்வேர்னியா கான்வென்ட் பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

கோவை டெக்ஸ்சிட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள வ.உ.சி. கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இதில், 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

அரையிறுதிப் போட்டி

மாணவர்களுக்கான முதலாவது அரையிறுதி போட்டியில், பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளி அணி, நேஷனல் மாடல் பள்ளி அணியை 37-31 என்ற புள்ளி கணக்கிலும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளி அணி, பெர்க்ஸ் பள்ளி அணியை 56-40 என்ற புள்ளி கணக்கிலும் வென்றது.

இறுதிச்சுற்றில் பிஎஸ்ஜி சர்வஜனா பள்ளி அணி, கே.கே.நாயுடு பள்ளி அணியை 56-45 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மாணவிகள் பிரிவு

அதேபோல், மாணவிகள் பிரிவு முதலாவது அரையிறுதி போட்டியில் கிருஷ்ணம்மாள் பெண்கள் பள்ளி அணி, துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளி அணியை 52-28 என்ற புள்ளி கணக்கிலும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் அல்வேர்னியா கான்வென்ட் அணி, எஸ்.வி.ஜி.வி. பள்ளி அணியை 46-30 என்ற புள்ளி கணக்கிலும் வீழ்த்தின.

பரிசளிப்பு விழா

இறுதிச்சுற்றில் அல்வேர்னியா கான்வென்ட் அணி, கிருஷ்ணம் மாள் பள்ளி அணியை 58-48 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரவுண்டு டேபிள் 7 அமைப்பின் தலைவர் வித்யாதரன், துணைத்தலைவர் பிரதீப் ராஜப்பா ஆகியோர் பரிசுக் கோப்பைகளை வழங்கினர்.

FOLLOW US

WRITE A COMMENT

x