கோவை
காமராஜர் விருதுக்கு காத்திருக் கின்றன, கோவை பள்ளிகள். தகுதிபெற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காமராஜர் பிறந்தநாளான ஜூலை15-ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாககொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்ட வாரியாக 4 சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் தொடக்கப் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், மேல்
நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி, கட்டமைப்பு வசதியைமேம்படுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை அறிவுறுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கல்வி வளர்ச்சி நாள் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும், கோவை மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான காமராஜர் விரு
துக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் பட்டியலை வெளியிடாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் பேரூர் கல்வி மாவட்டசெயலர் எம்.ராஜசேகர் கூறும்போது, ‘‘காமராஜர் விருதுக்கு மாவட்ட அளவில் கல்வி அதிகாரிகளைக் கொண்டுகுழு அமைத்து, பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால் இதுவரை தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதற்கு முன் சுதந்திர தினத்தன்று இவ்விருதுவழங்கப்படுவது வழக்கம். நடப் பாண்டில் 3 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை எவ்வித அறிவிப்பையும், மாவட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாகம் வெளியிடவில்லை. எனவே காலம் தாழ்த்தாமல் தகுதிவாய்ந்த பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டு, விருது வழங்க வேண்டும்'’ என்றார்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையினரிடம் கேட்டபோது, விருதுக்கான தகுதி வாய்ந்த பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விருது வழங்குவதற்கு, அரசு நிதிக்காக காத்திருக்கிறோம். நிதி கிடைக்கப் பெற்றதும் விருது வழங்கப்படும்' என்றனர்.
WRITE A COMMENT