ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள அழகன் குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட மன நலத் திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்தரங்குக்கு ரெட் கிராஸ் மாவட்டத் தலைவர் எஸ். ஹாரூன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ராதா வரவேற்றார். இந்த கருத்தரங்கில் 240 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மன நல திட்ட இயக்குநர் மருத்துவர் பெரியார் லெனின், மனநல செவிலியர் ராஜசேகர், மன நலசமூக சேவகர்அவினாஷ் ஆகியோர் போதைப் பொருளை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், வாழ்க்கையில் முன்னேற்றம் அடை வதற்கு உறுதுணையாய் இருக்கும் ஒழுக்க நிலைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். நிறைவாக,ஆசிரியர் குரு லக்ஷ்மி நன்றி கூறி னார்.
WRITE A COMMENT