ஆம்பூர்
ஆம்பூர் அருகே அரசுப் பள்ளி மாணவ,மாணவிகள் ஊர்வலமாக சென்றுடெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் டெங்கு விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளி வளாகத் தில் தொடங்கப்பட்ட பேரணி, வெள்ளக்கல், பூமாவட்டம், ஆலமரவட்டம், சாந்திநகர், புதுமனை, தாண்டவனேரிவட்டம், நாகமரத்துபள்ளம் ஆகிய கிராமங்கள் வழியாக மாணவர்கள் ஊர்வலமாக சென்று டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில், ஆசிரியர் ஹரிபாபு நன்றி கூறினார்.
இதேபோல், ஆம்பூர் அடுத்த மேல்சான்றோர்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். மேல்சான்றோர் குப்பம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்ற மாணவர்கள் டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.
WRITE A COMMENT