சென்னை
பள்ளிக்கல்வியின் கூடுதல் மாநில திட்ட இயக்குநர் என்.வெங்கடேசன், அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
கல்வி தகவல் மேலாண்மை முகமை இணையதளத்தில் (எமிஸ்) மாணவர்களின் வருகைப்பதிவை தினமும் பதிவுசெய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. மாணவர் வருகைப்பதிவை தொடர்ந்து கண்காணித்து இடைநிற்றல் தவிர்க்கவும். கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்கள் வருகைப்பதிவு விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் முறையாக பதிவேற்றாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளின்மாணவர்கள் வருகைப்பதிவு விவரங்களை தினமும் கண்காணித்து மதியம் 1 மணிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
WRITE A COMMENT