நம்பிக்கையூட்டும் வகையில் கடிதம் எழுதிய பள்ளி மாணவிக்கு இஸ்ரோ தலைவர் கே.சிவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 லேண்டர் நிலவில்இறங்கும்போது சிக்னல் துண்டிக்கப்பட்டது. அப்போது இஸ்ரோ தலைவர் சிவனுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி6-ம் வகுப்பு மாணவி நதியா உணர்வுப்பூர்வமாகக் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தை படித்த விஞ்ஞானி சிவன், அந்த மாணவிக்கு பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘உன் அன்புக் கடிதத்துக்கு நன்றி. சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து கவனித்து அதைப் பற்றிநன்றாக எழுதி இருக்கிறாய். சந்திரயான்-2 லேண்டர் வெற்றிகரமாகதரையில் இறங்காமல் இருந்தாலும்,ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுகிறது. ஆர்பிட்டரில் உள்ள கருவிகள் ஏழு ஆண்டுகளுக்கு நிலவு குறித்ததகவல்களை அனுப்பும். இஸ்ரோவின்ஒவ்வொரு முயற்சிக்கும் உங்கள் பள்ளி பிரார்த்தனை செய்தது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானி தனக்கு கடிதம் அனுப்பியது குறித்து மாணவிநதியா கூறுகையில், ‘இஸ்ரோ தலைவர் எழுதிய கடிதம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று" என்றார்.
WRITE A COMMENT