மாநில யோகா, கராத்தே போட்டிகள்: கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்


மாநில யோகா, கராத்தே போட்டிகள்: கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

கோவில்பட்டி

மாநில சிலம்பம், யோகா மற்றும் கராத்தே போட்டிகளில் கோவில்பட்டி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

விருத்தாச்சலம் மக்கள் மன்றத்தில் மாநில அளவிலான சிலம்பம், யோகா, கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சுபாஷ் சந்திரபோஸ் ஜூனியர் சிலம்பம் சண்டை பிரிவில் முதலிடமும், தனித்திறன் பிரிவில் 2-ம் இடமும் பெற்றனர்.

சப்-ஜூனியர் சிலம்பம் சண்டை பிரிவில் மாணவர் பாலதர்ஷன் 2-ம் இடமும், தனித்திறன் பிரிவில் 3-ம் இடமும் பெற்றார். ஜூனியர் யோகா பிரிவில் செவன்த்டே பள்ளி மாணவர் முத்துசெல்வன் முதலிடமும், கராத்தே குமிட்டே பிரிவில் முதலிடமும் பெற்றார். மினி சப்-ஜூனியர் யோகா பிரிவில் மந்தித்தோப்பு இந்து தொடக்கப் பள்ளி மாணவர் ஸ்ரீநவீன் குமிட்டே பிரிவில் முதலிடமும், மினி சப்-ஜூனியர் சிலம்பம் தனித்திறனில் கவுணியன் பள்ளி மாணவர் ஹரிஷ் 2-ம் இடமும், கராத்தே தனித்திறனில் 3-ம் இடமும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு முத்துக்குமார் தலைமை வகித்தார். கலைமகள் சபா முருகன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை அஸ்வா குங்பூ அன்டு ஆல் ஸ்போர்ட்ஸ் டெலப்மென்ட் அசோசியேஷன் மற்றும் பெஸ்ட் லைப் பவுண்டேஷன் செயலாளர் காசி மாரியப்பன் செய்திருந்தார்.

FOLLOW US

WRITE A COMMENT

x