மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்


மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

பெரம்பலூர்

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ என்ற திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கான தடகளம், கபடி, டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, கீழப்புலியூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மகிளா சக்தி கேந்திரா திட்டத்தின் மகளிர் நல அலுவலர் பெ.ஜெயந்தி வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் ஜோதிலிங்கம் தலைமை வகித்தார்.

விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் லோ.ரேவதி, ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ என்ற திட்டத்தின் பயன்கள் குறித்தும், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும் விளக்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மகிளாசக்தி கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.பாரத் நன்றி கூறினார்.

FOLLOW US

WRITE A COMMENT

x