ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பணியில் தூய்மை தூதுவர்கள்


ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பணியில் தூய்மை தூதுவர்கள்

திருச்சி

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தூய்மை தூதுவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச் சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் சற்குணன் தலைமை வகித்தார். பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் சந்துருதலைமையில் தூய்மை தூதுவர்கள் (மாணவர்கள்) களத்தில் இறங்கி பள்ளி வளாகத்தை தூய்மை செய்தனர்.

பின்னர், இம்மாணவர்கள் கொசு வலையால் ஆன ஒரு கூண்டு மற்றும் கண்ணாடிக் குடுவையில் நிரப்பப்பட்ட தூய நீரில் பல்வேறு நிலைகளில் சேகரிக்கப்பட்ட லார்வா புழுக்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று,அப்பகுதி மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது, லார்வா புழுக்களின் தொடக்க நிலை முதல் முதிர்ந்த நிலை வரை பொதுமக்களுக்கு மாணவர்கள் விளக்கினர்.

லார்வா முட்டை புழு ஒரு வாரத்தில் கொசுவாக மாறுவதையும், அந்த கொசு இரு வாரங்களுக்கு உயிரோடு இருக்கும் என்ற தகவல்களையும் மாணவர்கள் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

மேலும், வீடுகளை சுற்றியுள்ள நல்லதண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் மாணவர்கள் விளக்கம் அளித்தனர். தூய்மை தூதுவர்கள் குழு ஊனையூர் மட்டுமில்
லாது, அம்பிகாபுரம் கிராமத்திலும் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை உடற்கல்வி ஆசிரியர் கா.சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x