கைத்தறி இயந்திரத்தில் புதிய தொழில்நுட்பம்: தனியார் பள்ளி மாணவிகள் சாதனை


கைத்தறி இயந்திரத்தில் புதிய தொழில்நுட்பம்: தனியார் பள்ளி மாணவிகள் சாதனை

சின்னாளபட்டி

கைத்தறி பட்டுத் தொழிலை மேம்படுத்தும் வகையில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவிகள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கைத்தறி இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கைத்தறி பட்டு, சுங்கடி சேலைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. பட்டு உற்பத்தி செய்யும் கைத்தறி இயந்திரத்தில் புட்டா போடும்போது கையில் நூலை எடுத்துவிடும் நிலை உள்ளதால் கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்படுவதுடன், உற்பத்தி செய்யவும் கூடுதல் நேரமாகும். இதுபோன்ற காரணங்களால் பட்டு உற்பத்தியில் ஈடுபடுவதை நெசவாளர்கள் கைவிடத்தொடங்கினர். இதனால் பட்டு உற்பத்தி வெகுவாகக் குறைந்து அத்தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை யும் குறையத் தொடங்கியது. இதை உணர்ந்த சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர் ஆய்வு செய்தனர். அதில், கையில் புட்டா போடுவதற்குப் பதிலாக கைத்தறி இயந்திரத்திலேயே புட்டா போடும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கைத்தறி இயந்திரம் உருவாக்கியிருந்தனர். அந்த கண்டுபிடிப்பை `இந்து தமிழ்' நாளிதழ், விஐடிபல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல்இயக்கம் நடத்திய நாளைய விஞ்ஞானி நிகழ்ச்சியில் சமர்ப்பித்தனர்.

அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர்ரா.பாண்டிசெல்வி வழிகாட்டுதலில் பிளஸ் 1 மாணவியர் சுஜா, திவ்யதர்சினி, தர்சினி, சரயுதேவி, சக்திஐஸ்வர்யா ஆகியோர் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x