மதுரை
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் மதுரை மாவட்டத்தில் 3,875 மரக்கன்றுகளை பள்ளி ஆசிரியர்கள் நட்டினர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாகக்
செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அதையொட்டி மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மற்றும் பசுமை நண்பர்கள் குழு சார்பில் மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 12,872 மரக்கன்றுகள் நட முடிவுசெய்யப்பட்டது. அதன் முதல் கட்டமாக மேலூர் கல்வி மாவட்டத்தில் 433 பள்ளிகளில் பணியாற்றும் 3,875 ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மரக்கன்றுகள் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்டக் கல்வி அலுவலர் அ.மீனாவதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் எச்.பங்கஜம் முன்னிலை வகித்தார். இதில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, அங்குள்ள 48 ஆசிரியர்களும் மரக்கன்றுகளை நட்டினர். விழாவில் பசுமை நண்பர்கள் குழுவைச் சேர்ந்த பொன்.குமார், சூரிய பிரகாஷ், தாமஸ், யோகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டானர்
WRITE A COMMENT