புதுக்கோட்டை
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டிப் பள்ளி மாணவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் விஜயலட்சுமி பாராட்டினார்.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கான தேர்வுப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில்,19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 46 கிலோ எடைப் பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டி ராமநாதன் செட்டி யார் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெ.தினேஷ் ஹனுமந்த் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
WRITE A COMMENT