அரியலூர்
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி திங்கள் கிழமை நடைபெற்றது. போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தொடங்கி வைத்தார்.
கல்வி மாவட்டஅலுவலர்கள் செல்வராஜ் (அரியலூர்),மணிமொழி (செந்துறை), ஹரி செல்வராஜ் (உடையார்பாளையம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
11,14,17,19 என்ற வயதின் அடிப்படையில் 4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து தலா 72 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், ஒவ்வொரு பிரிவிலும் 3 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன. இவர்கள் மாநில அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற் றுள்ளனர்.
WRITE A COMMENT