அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சோழன்குடிக்காடு அரசுஉயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நிலநடுக்கம் அறியும் கருவி, சூரிய ஆற்றலைக் கொண்டு நீர் சுத்திகரிப்பு செய்தல், கழிவு நீர் சுத்தம் செய்யும் கருவி, பசுமை உலகம், இயற்கைத் தோட்டம், வாகனப் போக்குவரத்து, மண் பாண்டங்கள் பயன்பாடு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
படைப்புகளை பார்வையிட்ட தலைமையாசிரியர் சுகுணா(பொறுப்பு) மற்றும் ஆசிரியர்கள் சிறந்த 3 படைப்புகளுக்கு பரிசுகளை வழங்கினர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் பாலநாகம்மாள், முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு படைப்புகளை பார்வையிட்டனர்.
WRITE A COMMENT