ஆளில்லா விமானம் எப்படி பறக்கிறது என்பது குறித்து தஞ்சை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவை ஏ.பி.ஜெ.விஷன் 2020 அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விமான மாதிரிகள் மூலம்விமானம் எப்படி பறக்க வைக்கப்படுகிறது, அதன் செயல் திறனை கீழே தரையில் இருந்தவாறு எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேபோல, மாதிரி ஏவுகலன்கள் மூலம் ஏவுகணையின் செயல்பாடுகள், செயற்கைக்கோள் எவ்வாறு விண்ணில் செலுத்தப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். பேசும்ரோபோ, மின்னணு இயந்திரங்களின் உற்பத்தி, பயன்பாடுகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஏ.பி.ஜெ.விஷன் 2020அமைப்புக் குழுவினர் கூறும்போது,"அப்துல் கலாம் பெயரில் இந்தஅமைப்பை உருவாக்கி, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் 4 ஆண்டுகளாக 185-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஏறத்தாழ 2.40 லட்சம்மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்.14 முதல் அக். 18 வரை 15 பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்" என்றனர்.
WRITE A COMMENT