திருநெல்வேலி
பெரியார் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொக்கலால் அரசு மேல்நிலைப் பள்ளி நூலகத்துக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 36 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.மனோகரன் நினை வாக கால்நடை மருத்துவர் திருநாவுக்கரசின் ஏற்பாட்டில் இப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
புத்தகங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலகுருவிடம், தென் காசி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வீரன் ஒப்படைத்தார். புத்தகங்களை பெற்றுக் கொண்ட தலைமையாசிரியர் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர் தமிழ்ச் செல்வன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
WRITE A COMMENT