தஞ்சாவூர்
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 98 மாணவர்களுக்கு கொடையாளர்கள் உதவியுடன் புதன்கிழமை குடைகள் வழங்கப்பட்டன.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை 98 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நூறாண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தற்போது மழை பெய்து வருவதாலும், வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாலும் மாணவ, மாணவிகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளியின் கல்விப் புரவலர்கள் ந.பழனிவேலு, எம்.கணேசன் ஆகியோர் சார்பில் தலா ரூ.110 மதிப்பிலான 98 குடைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.
புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கொடையாளர்களே இந்த குடைகளை வழங்கினர் என்பது குறிப் பிடத்தக்கது.. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலச்சந்தர், ஆசிரியர்கள் சுபா, சுபாஷ், பாலசுந்தரி, சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிவேல், நிர்வாகி நா.வெங்கடேசன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
WRITE A COMMENT