அரசு பள்ளியில் முப்பெரும் விழா


அரசு பள்ளியில் முப்பெரும் விழா
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் டெல்லி தேசிய புத்தக நிறுவனம் சார்பில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் புத்தக திருவிழா மற்றும் புத்தக கண்காட்சி கடந்த 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்புத்தக கண்காட்சியை வியாழக்கிழமை ஆர்வமுடன் பார்வையிடும் பள்ளி மாணவ - மாணவிகள். படம். என்.ராஜேஷ்

ஆண்டிப்பட்டி

ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகம், தேனிவைகை அரிமா சங்கம் ஆகியவை சார்பில் தன்னம்பிக்கை கருத்தரங்கம், நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, பாரதியார் தின விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன.

தலைமை ஆசிரியர் மகேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் கலந்துகொண்டார். கவிதை, கட்டுரை, பேச்சு, மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேராசிரியர் பாண்டுரங்கம் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

FOLLOW US

WRITE A COMMENT

x