கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 லட்சத்தில் மேசை மற்றும் நாற்காலிகள் அதிமுகஎம்எல்ஏ அசோக்குமார் வழங்கினார்.
பள்ளியில் 500க்கும் மேற்பட்டமாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள பல வகுப்பறைகளில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிப்பதால், பள்ளிக்கு மேசை மற்றும் நாற்காலிகளை வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துரூ.5 லட்சத்தில் 35 ஜோடி மேசை மற்றும் நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கண்ணியப்பன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்றார். இதில், அசோக்குமார் மேசை, நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கி பேசினார்.
அப்போது, மாணவ, மாணவிகள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
WRITE A COMMENT