சென்னை: மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வளம், கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனமான சிஃப்னெட் (CIFNET) சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் கப்பல் வழிகாட்டி படிப்பு (VESSEL NAVIGATOR COURSE), கடல்சார் ஃபிட்டர் படிப்பு (MARINE FITTER COURSE) படிப்புகளை வழங்குகிறது. மூன்று வளாகங்களிலும் சேர்த்து மொத்தம் 120 இடங்கள் உள்ளன. நுழைவுத் தேர்வு அடிப்பபையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம்தோறும் ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படும்.
ஆக.5ம் தேதி நுழைவுத் தேர்வு: மேற்கண்ட படிப்புகளில் நடப்புகல்வி ஆண்டில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்க கையேட்டை சிஃப்னெட் நிறுவனத்தின் இணையதளத்தில் (www.cifnet.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்துடன் ஜூலை 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெறும் என சிஃப்னெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
WRITE A COMMENT