மதுரை: குழந்தைகளை தன்னம்பிக்கையோடு வாசிக்க வைப்பது எப்படி என்பது குறித்து மதுரையில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளிகளில் தட்டுத்தடுமாறி வாசிக்கும் குழந்தைகளை, தன்னம்பிக்கையோடு வாசிக்க வைப்பதுதான் பள்ளிக்ககல்வித்துறை வாசிப்பு இயக்கத்தின் நோக்கம். அதையொட்டி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி முகாம் மதுரையில் நடைபெற்றது. இம்முகாமை தொழிற்கல்வி இணை இயக்குநர் வை.குமார் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன துணை முதல்வர் ராமராஜ், மதுரை மாவட்ட உதவி திட்ட அலுவலர் (தொடக்கக் கல்வி) சரவண முருகன் ஆகியோர் பங்கேற்றனர். வாசிப்பு இயக்கத்தின் மாநில கருத்தாளர்கள் முத்துக்கண்ணன், மோசஸ், அமுதாசெல்வி, ராஜமாணிக்கம், பாலகிருஷ்ணன், ரமேஷ் குமார், சப்திகா டோமிலா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இம்முகாமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரேம்நேவிஸ், அமுதா, தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் நிர்வாகி ஜெரோம்பால் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
WRITE A COMMENT