ராமநாதபுரம்: தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில், கடலாடி பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
சியன் ஸ்போர்ட்ஸ் யோகாசன கூட்டமைப்பு சார்பில் ஆசியன் யோகாசன ஸ்போர்ட்ஸ் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் ஜுன் 24 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் ஆசியாவின் 30 நாடுகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் பங்கேற்றனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வி.வி.எஸ்.எம். மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவி வில்வ முத்தீஸ்வரி 3-ம் இடம்பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
WRITE A COMMENT