தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்


தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட வந்த பள்ளி மாணவிகளுக்கு பல்வேறு விதமான மீன்கள் குறித்து பேராசிரியர் எடுத்துரைத்தார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப்பணிகளை நேரில் அறிந்துகொண்டனர்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் 2012 ஜூன் 19-ம் தேதிநாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக தொடக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே மீன்வளப் படிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ந ‘பொது சந்திப்பு நாள்’ திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மீன்வளக் கல்லூரிமுதல்வர் ப.அகிலன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்.ரெஜினி பள்ளி மாணவ, மாணவிகள் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள 22 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டனர். மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

இக்கல்லூரியில் வழங்கப்படும் இளநிலை மீன்வளப் பட்டப்படிப்பு, முதுநிலை மீன்வளப் பட்டமேற்படிப்பு, பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு குறித்தும், இவற்றை படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்கம்அளிக்கப்பட்டது. பேராசிரியர் வி.ராணிநிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

FOLLOW US

WRITE A COMMENT

x