Published : 03 Feb 2020 07:56 AM
Last Updated : 03 Feb 2020 07:56 AM

புத்தகம், உபகரணங்கள், சீருடை வாங்க நகர்ப்புற மாணவர்களை விடவும் கிராம மாணவர்களுக்கு அதிக செலவு

கோப்புப்படம்

புதுடெல்லி:

‘‘நகர்ப்புற மாணவர்களைவிட, கிராமங்களில் உள்ள மாணவர்கள் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடைகளுக்காக 10 சதவீதம் அதிகமாக செலவு செய்கின்றனர்’’ என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் 2019-20-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், பொருத்தமான நிதி ஆதாரங்கள் இல்லாததும், அதிககல்வி கட்டண சுமையின் காரணமாகவும் ஏழை மக்கள் கல்வியை கைவிடுவது, குறிப்பாக உயர்கல்வியை தவிர்க்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தேசிய மாதிரி கணக்கெடுப்பு(என்எஸ்எஸ்) நடத்திய ‘இந்தியாவின் கல்விக்கான வீட்டுச் சமூகநுகர்வு குறியீடு 2017-18’ என்ற கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, 2017-18 ஆண்டில் 3 வயது முதல் 35 வரை உள்ள 13.6 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பில்சேரவில்லை. இவர்கள் பள்ளிகளில்சேராததற்கு கல்வியில் விருப்பமின்மை மற்றும் பொருளாதாரச் சிக்கல் என்ற காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

இதில் பள்ளிக் கல்வியில் சேர்ந்த பின்னர், இடைநின்றவர்களின் விகிதமானது தொடக்கப்பள்ளியில் 10 சதவீதம், 8-ம் வகுப்பில் 17.5 சதவீதம் மற்றும் 19.8 சதவீதம் பேர் 10-ம் வகுப்பில் பயின்றவர்கள் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பானது இந்தியா முழுவதும் உள்ள 50.8 சதவீதம் பேர் வெவ்வேறு வகைகளில் உள்ள செலவுகளில் கல்விகட்டணத்தையே சுட்டிக்காட்டுகின்றன. மீதம் உள்ளவர்கள் அடிப்படை கல்விக்கே அதிகபட்சமாக செலவு செய்கின்றனர். இதன் மூலம்‘அனைவருக்கும் கல்வி’ என்ற முன்னெடுப்பு சவாலாக அமைகிறது. இதில் கல்வி கட்டணம் உட்பட தேர்வு கட்டணம், மேம்பாட்டு கட்டணம் மற்றும் வேறு கட்டாய கட்டணம் உள்ளிட்டவை அடங்கும்.

இதில் மாணவர்கள் கல்விக்காக செய்யும் அதிகபட்ச செலவுகளில் 2-வது பெரிய செலவு என்பது புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகளாக உள்ளன. இவற்றுக்கு நகர்ப்புற மாணவர்களை விட, கிராம மாணவர்களுக்கு அதிக செலவாகிறது. சராசரியாக இந்த செலவு 10 சதவீதம் அதிகமாக உள்ளது.

மேலும் இந்தியா முழுவதிலும் உள்ள கிராம - நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிறுவனங்களை ஒப்பிடும்போது அரசு உதவி பெறும் நிறுவங்களில் பயிலும் மாணவர்கள் அதிக செலவு செய்கின்றனர். இது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

என்எஸ்எஸ் வெளியிட்டுள்ள 2017-18-ம் ஆண்டின் அறிக்கையின்படி அரசு நிறுவனங்களில் 2-ம் நிலை கல்வி பயிலும் மாணவனின் கல்விச் செலவு ரூ.4,078 என்று உள்ளது. இதே நிலையில் அரசு உதவி பெறும் நிறுவனத்தில் பயிலும் மாணவன் ரூ.12,487 செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x