Published : 03 Jan 2020 08:05 AM
Last Updated : 03 Jan 2020 08:05 AM
ஆர்.ஷபிமுன்னா
கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாநிலங்களில் உ.பி.யும் முக்கியமாக உள்ளது. இங்கு செயல்படும் அரசு பள்ளிகளில் பலவும் போதுமான ஆசிரியர்கள் மற்றும் இதர வசதிகள் இன்றி மோசமான நிலையில் உள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியில் தற்போது உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இறங்கியுள்ளது
அதன் ஒரு பகுதியாக, திறமையுள்ள மற்றும் பணிக்கு ஒழுங்காக வரும் ஆசிரியர்களை அமர்த்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதில், பல வருடங்களாக தாம் பாடம் நடத்தும் வகுப்புகளுக்கு முறையாக வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, அவர்களின் அன்றாட பள்ளி வரவை கைபேசிகளில் ‘செல்பி’ எடுத்து அரசு இணையதளத்தில் பதிவாக்கும் முறை அமலாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உ.பி.யின் அரசு துவக்கப்பள்ளிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அவற்றைஅதே வளாகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், துவக்கப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர், துணை தலைமைஆசிரியர் மற்றும் அவர்களுக்கான அலுவலக உதவியாளர்கள் பதவி ரத்து செய்யப்படுகிறது. இனி அவர்களது பணிகளை உயர்நிலைப் பள்ளிகளில் இருப்பவர்களே செய்வார்கள். இவ்வாறு, உ.பி.யில் உள்ளசுமார் 16,000 துவக்கப் பள்ளிகள்மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன.
தற்போது உபி முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகள் எண்ணிக்கை 1,58,914 உள்ளன. இந்தஇணைப்பால் பள்ளிகள் எண்ணிக்கை மேலும் குறைய உள்ளன.எனினும், இதற்காக அரசு இதுவரைசெய்து வந்த செலவுத் தொகைகுறைய உள்ளது. இதனால்,அரசுக்கு பல கோடி ரூபாய் மீதமாக உள்ளது.
இதேபோல், ஒரே பகுதியில் இருக்கும் மூன்று துவக்கப் பள்ளிகளின் மதிய உணவு சேர்த்து ஒரு பள்ளியில் சமைக்கப்படுகிறது. இதனாலும், அரசுக்கு செலவுத் தொகை மிச்சமாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT