Published : 30 Dec 2019 07:06 AM
Last Updated : 30 Dec 2019 07:06 AM
தீக் ஷா செயலியில் பதிவேற்றப்பட்டுள்ள அறிவியல் சோதனை வீடியோக்களை மாணவர்கள் செய்து பார்க்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் புதிய பாடத்திட்ட புத்தகங்களில் நவீன க்யூஆர் கோடு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. அதற்கு உதவியாக ‘தீக் ஷா’ என்ற செல்போன் செயலியை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது. இதில் அனைத்து மாநில பாடத்திட்ட புத்தகங்கள், கற்றல் வழிமுறைகள் வீடியோ வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. புத்தகத்தில் உள்ள க்யூஆர் கோடை தீக் ஷா செயலி வழியாக ஸ்கேன் செய்யும்போது அதற்கான வீடியோ திரைக்கு வரும். இந்த முறையை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை எளிதாக படிக்கலாம்.
தமிழகத்தில் 51 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். தேசியளவில் இந்த செயலியை பயன்படுத்தும் நகரங்களில் சென்னை முன்னணியில் இருக்கிறது. இதற்கிடையே 6 முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக 400 வீடியோக்கள் தீக் ஷா வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் எளிய அறிவியல் சோதனைகள் அடங்கிய வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன. அரையாண்டு விடுமுறையான தற்போது இந்த அறிவியல் சோதனைகளை மாணவர்கள் வீடுகளில் செய்து பார்க்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT