Published : 10 Dec 2019 08:09 AM
Last Updated : 10 Dec 2019 08:09 AM
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாககுழந்தைகளை தாக்கும் நோய் தட்டம்மை. இதனை தடுக்க, குழந்தைகளுக்கு 2 முறை தடுப்பூசி போடப் படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தட்டம்மைக்கான தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால்உலக அளவில் சுமார் ஒரு லட்சத்து40 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், உலக அளவில் 2018-ம்ஆண்டு ஒரு கோடி பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு, அதில் 1.4 லட்சம் பேர் இறந்துள்ளனர். உலக அளவில் 6 நாடுகளில் தடுப்பூசி போடாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதில் முதலில் நைஜிரியா (24 லட்சம்), இந்தியா (23 லட்சம்), பாகிஸ்தான் (14 லட்சம்), எத்தோபியா (13 லட்சம்), இந்தோனேசியா (12 லட்சம்),பிலிப்பைன்ஸ் (7 லட்சம்) ஆகிய நாடுகள்உள்ளன.
இந்தியாவில் 2017-ல், 29 லட்சம்குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. 2018-ல் 70 ஆயிரம் பேருக்குதட்டம்மை பாதிப்பு இருந்த நிலையில்,2019-ல் 29 ஆயிரம் பேருக்குதான் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தட்டம்மை நோய்க்கு 2 அளவுகளில் தடுப்பூசி போடவேண்டும். ஆனால், 2018-ல் உலக அளவில் 86 சதவீதம் குழந்தைகளுக்கு முதல் முறை தடுப்பூசியும், 69 சதவீதம் குழந்தைகளுக்கு 2-வது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT