Published : 27 Nov 2019 07:34 AM
Last Updated : 27 Nov 2019 07:34 AM
பூமியை ஆராய்வதற்காக ‘கார்ட்டோசாட்’ ரக செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது 9-வதாக ‘கார்ட்டோசாட்-3’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன், அமெரிக்காவின் ‘நானோ’ வகையைச் சேர்ந்த 13 செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.
ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து கடந்த 25-ம் தேதி ‘கார்ட்டோசாட்-3’ விண்ணில் செலுத்தப்பட இருந்தது. பின்னர் தொழில்நுட்ப காரணங்களால் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 26 மணி நேர ‘கவுன்ட் டவுண்’ நேற்று காலை தொடங்கியது.
மொத்தம் 1,625 கிலோ எடை கொண்டது கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் பூமியைச் சுற்றிவந்து பல படங்கள், தகவல்களை அனுப்பும். மேலும், முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT