Published : 07 Nov 2019 07:04 AM
Last Updated : 07 Nov 2019 07:04 AM

பி.எட் சிறப்பு கல்வி நவ.18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் பி.தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பு:

2020-ம் ஆண்டுக்கான பிஎட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேடு பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnou.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் வரும் நவம்பர் 18-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரத்துடன் சிறப்பு பிஎட் கல்வி படிப்பு நடத்தப்படுகிறது. இது பிஎட் பொதுப் படிப்புக்கு நிகரானது. கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அல்லது 044 - 2430 6600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x