Published : 06 Nov 2019 08:23 AM
Last Updated : 06 Nov 2019 08:23 AM
வாஷிங்டன்
ஒரு பாத்திரத்தில் கொதி நிலையில் இருக்கும் சூடான எண்ணெய்யின் சூட்டை எப்படி உடனடியாக குறைக்க முடியாதோ, அதே போல் பூமி சூட்டையும் தடுக்க இயலாது. 2030-ம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாகக் குறைத்தாலும் கடல் மட்டம் உயர்வதைத் தடுத்து நிறுத்த முடியாது என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இதில் 1986-2005 காலகட்டம் வரை எடுக்கப்பட்ட குறிப்புடன் ஒப்பிடுகையில் 2300-ம் ஆண்டில் கடல்மட்டம் 20 செ.மீ. வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை நேஷனல் அகாடமி அஃப் சயின்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-ஏஎப்பி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT