Published : 04 Nov 2019 10:07 AM
Last Updated : 04 Nov 2019 10:07 AM

ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4% பேர் மட்டுமே தேர்ச்சி

சென்னை

இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக ஆரம்பப்பள்ளிகளில் 1 முதல்5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சி (2 ஆண்டு) முடித்து தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் 12 அரசு, 29 அரசு நிதியுதவி மற்றும்247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் 2019-ம் ஆண்டுக் கானதொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு கடந்தஜூன் மாதம் அரசு தேர்வுத்துறையால் நடத்தப் பட்டது. தேர்வு முடிவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் மிகவும் குறைந்தளவில் 2.4 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதன்படி தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வை முதலாமாண்டு மாணவர்கள் 3,000 பேர் எழுதினர். அவர்களில் 75 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 2-ம் ஆண்டு மாணவர்கள் 4,503 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயச் சான்று பெற தகுதி பெற்றுள்ளனர். விடைத்தாள் திருத்தம் உட்பட தேர்வு முறைகளில் பின்பற்றப்படும் கடும் கட்டுப்பாடுகளால் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கலாம் என ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் முதல்வர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x