Published : 31 Oct 2019 10:47 AM
Last Updated : 31 Oct 2019 10:47 AM

மாணவர்களுக்கு மாலை உணவு வழங்கி சிறப்பு வகுப்புகள் நடத்தும் மதுரை பள்ளி

என்.சன்னாசி

மதுரை

மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி, மாணவர்களுக்கு மாலை உணவு வழங்கி சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது.

மதுரையில் மதுரா கோர்ட்ஸ் காட்டன் மில் தொழிலாளிகளின் குழந்தைகளுக்காக 1951-ல் தொடங்கப்பட்டது மதுரை லேபர் வெல்பர் அசோசியேஷன் மேல்நிலைப் பள்ளி. அரசு உதவி பெறும் இப்பள்ளி தற்போது ஜெயின் கல்வி அறக்கட்டளை சார்பில், செயல்படுகிறது. இதன் செயலராக பவர்லால் உள்ளார். இங்கு 640-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அலங்காநல்லூர், திருவாதவூர், உசிலம்பட்டி, வண்டியூர் உள்ளிட்ட வெகுதொலைவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் நாக சுப்பிரமணியன் உட்பட10 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 5 இளநிலை ஆசிரியர்
கள், தலா ஒரு உடற்கல்வி, ஓவியஆசிரியர்கள் மற்றும் 7 அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.

உணவுடன் மாலை வகுப்பு

பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த சாதாரண தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளி 2015 முதல் இதுவரை தொடர்ந்து 10, 12-ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இங்குபணிபுரியும் ஆசிரியர்கள்,அலுவலர்களே இதற்கு காரணம். இதுகுறித்து தலைமை ஆசிரியரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான நாக சுப்ரமணியன் கூறியதாவது:

பொதுவாக, நகர்ப்புறத்தை விட, கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியதும் வீட்டுப் பாடங்களில் முறையாக கவனம் செலுத்துவது இல்லை. ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகள் இரவில் ஓட்டல், கடைகளில் பகுதி நேர வேலைக்குச் செல்கின்றனர். இதுபோன்ற நிலையால் 10, 11 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த தவறுகின்றனர். இதைத் தவிர்க்க தினமும் மாலை 4 மணிக்கு வகுப்பு முடிந்த பிறகு 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் டிபன், பொங்கல்
போன்ற உணவு களை வழங்கிசிறப்பு வகுப்புகள் நடத்துகிறோம். பெரும்பாலும், அவர்கள்வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்கின்றனர்.

தொடர்ந்து 100% தேர்ச்சி

இத்திட்டத்துக்கு பெற்றோரும் ஒத்துழைப்பு தருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி அவர்கள் கூடுதலாக ஓரிரு மணி நேரம் உழைக்கின்றனர். 2015-ல் நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றது முதல்தொடர்ந்து பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெறுகிறோம். கலை, விளையாட்டுகளிலும் திறன் வாய்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு ஊக்கமளிக்கிறோம்.

மதுரை கல்வி மாவட்ட அளவில் இந்த ஆண்டுக்கான சாரண, சாரணியர் விருதை ஆளுநரிடம் இருந்து 11-ம்வகுப்பு மாணவர் அருண் பரமேசுவரன் பெற்றார். ஆண்டுதோறும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை பணிகளை செய்கிறோம். 10-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் வாங்கியவர்களை முன்னேற்றி அதிக மதிப்பெண் எடுக்கச் செய்வதே எங்கள் நோக்கம்.

பெற்றோர் முழு ஒத்துழைப்பு

தினமும் வருகைப்பதிவின்போது, எந்த மாணவர் வரவில்லையோ அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துவிசாரிப்போம். அலங்காநல்லூர்,திருவாதவூர், திருநகர் பகுதிமாணவர்களுக்காக இலவச வாகன வசதியும் செய்து கொடுத்துள்ளோம். இது மாதிரியான செயல்பாடுகளால் இப்பள்ளி மாணவர்களை முன்னேறச் செய்ய முடிகிறது. பள்ளிச் செயலர் மற்றும் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் தகுந்த ஒத்துழைப்பு தருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x