Published : 30 Oct 2019 09:46 AM
Last Updated : 30 Oct 2019 09:46 AM

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நவ.18-ல் பதவியேற்பு

புதுடெல்லி

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் நவம்பர் 17-ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்தே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்தார்.

அதன்படி, புதிய நீதிபதியாக நவம்பர் 18-ம் தேதி பாப்தே பதவியேற்கவுள்ளார். பாப்தே 1956-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பிறந்தவர்.

2012-ம் ஆண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பொறுப்பேற்றார். ஆதார் வழக்கு, கிரிக்கெட் வாரிய வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை இவர் விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x