Published : 23 Oct 2019 07:31 AM
Last Updated : 23 Oct 2019 07:31 AM

நினைவுகளை மூளை எவ்வாறு நிரந்தரமாகப் பதிவு செய்கிறது?- புதிய ஆய்வில் சுவாரசியமான தகவல்கள்

மனிதர்கள் தூங்கும்போது, ‘​​ஹிப்போகாம்பஸ்’ எனப்படும் கடல் குதிரைவடிவ மூளைப்பகுதி விழித்திருக்கும். அப்போது அதன் இயல்பு செயல்பாட்டைப் போன்ற ஒரு நிலையை அடைய, தன்னிச்சையாக மீண்டும் செயல்படுகிறது என்று அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனால், தூக்கத்தில் நடப்பதையும் நினைவு வைத்திருக்க முடியும் என்றும் நினைவுகளை மூளை எவ்வாறு நிலைப்படுத்துகிறது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் சென்டர் நேஷனல் டி லா ரிசர்ச் சயின்டிஃபிக் (சிஎன்ஆர்எஸ்) நிறுவன ஆராய்ச்சியாளர்கள், மனிதமூளை குறித்து தொடர்ந்து ஆய்வுமேற்கொண்டனர். அதன்படி, தூக்கத்தின்போது, ஹிப்போகாம்பஸ் மூளையின் இடது பக்கம் உள்ள கார்டெக்ஸுக்கு தகவல்களை அனுப்புகிறது.

அதற்கு மூளை எதிர்வினையாற்றுகிறது. இந்த பரிமாற்றம் ‘டெல்டா அலை’ என்று அழைக்கப்படும்.

தூங்கும்போது, மனித மூளை ‘ஸ்லீப் ஸ்பிண்டில்’ எனப்படும் தாள செயல்பாட்டையும் பின்பற்றுகிறது எனஆய்வு குறிப்பிட்டுள்ளது. தூங்கும்போது, கார்டிகல் சுற்றுகள் மறுசீரமைக்கப்பட்டு நிரந்தரமான நினைவுகளை உருவாக்குகின்றன என்றும் புதிய நினைவுகளை உருவாக்குவதில் டெல்டா அலைகளின் பங்கு இன்னும் ஒரு புதிராகவே உள்ளது எனஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள னர்.

இந்நிலையில், டெல்டா அலைகளின்போது மூளையில் என்னநடக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் உன்னிப்பாகக் ஆராய்ச்சி செய்தபோது, சத்தத்தை உணரும் புறணி அமைதியாக இல்லைஎன்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தூங்கும்போது மனித மூளையில் ஒரு சில நியூரான்கள் சுறுசுறுப்பாக இருந்துள்ளன. இவற்றைஇடையூறுகளில் இருந்து பாதுகாக்கும்போது முக்கியமான வேலைகளை மூளையால் மேற்கொள்ள முடியும்என்று ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும், நமது அன்றாட நினைவுகள் மற்றும் மிக பழைய நினைவுகள் இந்த முறையில்தான் மூளையில் குறியீடுகளாக நிலை நிறுத்தப்படுகின்றன என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x