Published : 15 Oct 2019 08:11 AM
Last Updated : 15 Oct 2019 08:11 AM
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி, மேட்டுப்பாளையத்தில் உள்ள மகாஜன மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அக்டோபர் 19-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இது குறித்து கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.பி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோ வை மாவட்ட பிரிவு சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டி மேட்டுப்பாளையத்தில் உள்ள மகாஜன மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அக்டோபர் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் பெயர், பிறந்த தேதி, கலந்துகொள்ளும் விளையாட்டுப் பிரிவு ஆகிய விவரங்களை, நுழைவுப்படிவத்தில் குறிப்பிட்டு, 18-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) ‘‘உடற்கல்வி இயக்குநர், மகாஜன மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய 0422-2380010 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT