Published : 14 Jul 2022 07:40 AM
Last Updated : 14 Jul 2022 07:40 AM

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 10: இப்ப Simple future tense பார்ப்போம்!

ஷர்மிளா தேசிங்

இனியன்: பாட்டி, நாளைக்கு evening நம்ம எல்லாரும் சேர்ந்து park க்கு போகலாமா?

இசை: அதை இப்பவே முடிவு செஞ்சாச்சா

இனியன்: எந்த ஒரு விஷயத்தையும் plan பண்ணி பண்ணனும்ன்னு சொல்லுவாங்க. சரிதானே பாட்டி!

பாட்டி: சரிடா குட்டி, நாளைக்கு evening நிச்சயமாக போகலாம்.

இசை: பாட்டி, இப்போதான் புரியுது இனியன் எதுக்கு நாளை பற்றி பேசிட்டு இருக்கிறானு.

(எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தனர். Friends, இவங்க எல்லாரும் ஏன் சிரிக்கிறாங்ன்னு உங்களுக்கு புரியுதா?)

இசை, இனியன்: ஏனென்றால் இன்றைய topic, "Future Tense"

அனிதா பாட்டி: Future Tense-ல் I மற்றும் We என்ற subjects-க்கு shall என்ற word, verb-க்கு முன்னால் சேர்க்க வேண்டும். மற்ற subjects-க்கு will என்ற word, verb-க்கு முன்னால் சேர்க்க வேண்டும் அவ்வளவுதான்.

இனியன்: பாட்டி நான் formula கண்டுபிடிச்சிட்டேன். இங்க பாருங்க.

இசை: இதோ வேகமா எழுதியே முடிச்சிட்டேன். இங்க பாருங்க பாட்டி.

I shall drink water - நான் தண்ணீர் குடிப்பேன்

We shall drink water - நாங்கள் தண்ணீர் குடிப்போம்

You will drink water – நீ/ நீங்கள் தண்ணீர் குடிப்பாய்/ குடிப்பீர்கள்

He will drink water - அவன்/அவர் தண்ணீர் குடிப்பான் / குடிப்பார்

She will drink water - அவள் தண்ணீர் குடிப்பாள்

It will drink water - அது தண்ணீர் குடிக்கும்

They will drink water - அவர்கள் தண்ணீர் குடிப்பார்கள்

பாட்டி: உங்களைப் பார்த்தால் அவ்வளவு மகிழ்ச்சியா இருக்குது கண்ணுங்களா.

இசை, இனியன்: Friends, எங்களைப் போல நீங்களும் Future tense sentences எழுதிட்டு வரீங்களா.

Fill in the blanks

I shall like cake

We __________________________________

You __________________________________

He __________________________________

She __________________________________

It __________________________________

They __________________________________

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x