Published : 13 Jul 2022 07:45 AM
Last Updated : 13 Jul 2022 07:45 AM
பாட்டி: எல்லா புத்தகத்தையும் எடுத்து வச்சாச்சா ?
இசை: நேத்தே எடுத்து வச்சிட்டோம் பாட்டி. school க்கும்கிளம்பிட்டோம். சாப்பாடு பையையும் எடுத்துகிட்டோம். அம்மா எங்களுக்கும் packing செய்து கொடுத்து, அவங்களுக்கும் எடுத்துகிட்டாங்க. அப்பாவும் வேலைக்கு கிளம்பிட்டாங்க.
பாட்டி: இந்த இடத்தில் நீங்க இரண்டு பேரும் முக்கியமான ஒன்றை கவனிச்சீங்களா ?
இனியன்: எது பாட்டி?
பாட்டி: நான் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் நீங்க நடந்து முடிந்ததை பற்றி பதில் சொன்னீங்க. இப்படி நடந்து முடிந்ததை பற்றி பேசுவதைத்தான் past tenseனு சொல்லுவோம். அதாவது கடந்தகாலம்.
இசை: பாட்டி... schoolக்கு போக இன்னும் கொஞ்ச நேரம் இருக்குது.
இனியன்: so விளக்கமாக சொல்லுங்க அப்படின்னு அக்கா சொல்லுறா (கிகிகிகி )
பாட்டி: நீங்க படிச்ச verb table-ல் உள்ள past tense word இங்கே பயன்படுத்தணும்.
பாட்டி: நேற்று drink என்ற present verb பார்த்தோம் தானே. அதோட past tense verb சொல்லுங்க பார்க்கலாம்.
இனியன்: drank பாட்டி...
பாட்டி: அருமைடா செல்லம்!
பாட்டி: drink என்ற present tense word-க்கு பதிலாக drank என்ற past tense word போட்டால் போதும்.
இனியன்: He / She / It-க்கு simple present tense-ல் s சேர்த்தோமே பாட்டி...
பாட்டி: உங்க இரண்டு பேருக்கும் நல்ல ஞாபகம் இருக்கிறது. ஆனால், இங்க அப்படி இல்லை.
இசை: பாட்டி நான் technique ஐ கண்டு பிடிச்சிட்டேன். இங்க ஒரே formulaதான்.
இசை: subject past tense verb அவ்வளவு தான். simple past tense கத்துக்கிட்டோம்.
பாட்டி: very good கண்ணுங்களா.
இசை: இதோ வேகமா எழுதியிருக்கிறேன். இங்க பாருங்க..
I drank water - நான் தண்ணீர் குடித்தேன்
We drank water - நாங்கள் தண்ணீர் குடித்தோம்
You drank water – நீ/ நீங்கள் தண்ணீர் குடித்தாய்/குடித்தீர்
He drank water - அவன்/அவர் தண்ணீர் குடித்தார்
She drank water - அவள் தண்ணீர் குடித்தாள்
It drank water - அது தண்ணீர் குடித்தது
They drank water - அவர்கள் தண்ணீர் குடித்தார்கள்
இசை: quick ஆ ஒரு technique கத்துக்கிட்டோம் பாட்டி. school க்கு போயிட்டு வருகிறோம். Evening பார்க்கலாம்.
பாட்டி: பார்த்துபோயிட்டு வாங்க கண்ணுங்களா.
Friends, நீங்க நேற்று எழுதின simple present tense sentence எல்லாவற்றையும் simple past tense ஆக மாற்றி எழுதிட்டு வரீங்களா. நாளை பார்க்கலாம்.
Fill in the blanks
I liked cake
We _______________________________________
You _______________________________________
He _______________________________________
She _______________________________________
It _______________________________________
They _______________________________________
Word Bank
முக்கியம் - Important
மறைமுகம் - Indirect
ஞாபகம் - Remember
வேகமாக - Fast
அருமை - Awesome
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT