Published : 28 Feb 2020 10:24 AM
Last Updated : 28 Feb 2020 10:24 AM

ஆங்கில உரையாடல்: அதிலென்ன தவறுகள்? - மாமல்லபுரம் போவோமா!

​ஜி.எஸ்.எஸ்.

ஒரே தெருவில் வசிக்கும் சங்கரும், பரசுராமனும் உரையாடுகிறார்கள். அதன் ஒரு பகுதி இது.

Parasuraman – I am going Mahabalipuram this Sunday.
Sankar – Shall I come to you?
Parasuraman – Yes, you can. We will start at 7.00 a.m. in the morning.
Sankar – Why so early?
Parasuraman – Because we will visit some other places before Mahabalipuram.
Sankar – Like?
Parasuraman – Muttukkadu. Have you herd about the place?
Sankar – What special in Muttukkadu?
Parasuraman – We can enjoy a boat tripping.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடலில் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

வரும் ​​ஞாயிற்றுக்கிழமைதான் மகாபலிபுரத்திற்குச் செல்லப் போகிறான் பரசுராமன். எனவே I am going என்பதற்குப் பதிலாக, I will be going என்று அவன் கூறி இருக்க வேண்டும்.
Shall I come to you? என்பது சரியல்ல. Shall I come with you? என்றுதான் சங்கர் கேட்க வேண்டும்.

7.00 a.m. என்றாலே அது காலையைத்தான் குறிக்கிறது. அப்படியிருக்க அதைத் தொடர்ந்து in the morning ஆகிய சொற்கள் தேவையற்றவை.

We will visit some other places before Mahabalipuram என்பதன் பிற்பகுதியை before reaching Mahabalipuram அல்லது before visiting Mahabalipuram என்று கூறி இருக்க வேண்டும்.

Herd என்பது மந்தையைக் குறிக்கும் சொல். Heard என்பதைத்தான் பரசுராமன் பயன்படுத்தி இருக்க வேண்டும். இந்த இடத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா என்பதை Have you heard about this place? எனக் கேட்கலாம்.

What special in Muttukkadu என்பது தவறு. What is special in Muttukkadu என்று அதைத் திருத்திக் கூறலாம். Tripping என்றால் தடுக்கி விழுதல். Trip என்றால் சிறு பயணம். எனவே we can enjoy a boat trip என்றுதான் கூற வேண்டுமே தவிர we can enjoy a boat tripping என்று கூறக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x