Last Updated : 24 Feb, 2020 10:29 AM

 

Published : 24 Feb 2020 10:29 AM
Last Updated : 24 Feb 2020 10:29 AM

ஆங்கில உரையாடல்: அதிலென்ன தவறுகள்?- என்னுடைய கை கடிகாரம் வேலை செய்யலையே! 

லதாவும், வத்சலாவும் பேருந்து நிலையத்தில் அவரவருக்கான பேருந்துக்காகக் காத்திருக்கிறார்கள். அப்போது அவர்களிடையே தொடங்கிய உரையாடல் இது.

Latha – Excuse me. What is the time?
Vatsala – There are fifteen minutes more to six. (After a few seconds) I want to ask you a question.
Latha – Sure.
Vatsala – You wearing a watch. Why did you ask me the time?
Latha – My watch is not working.
Vatsala – Then, why do you wear it?
Latha – It shows everyday the right time two times.
(Both laugh)

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடல் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை
தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

What is the time? என்றோ What is the time now? என்றோ கேட்பது சகஜம்தான். ஆனால், what time is it (now)? என்பது மேலும் சரியானது.

There are fifteen more minutes to six என்று கூறுகிறாள் வத்சலா.அ​தாவது அப்போது மணி 5.45 என்பதை உணர்த்துகிறாள். இதை ‘’five-forty five” என்றே பேச்சுவழக்கில் கூறலாம். அல்லது it is quarter to six என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடுவார்கள்.

வத்சலா I want to ask you a question என்கிறாள். இதற்குப் பதிலாக may I ask you something? என்று அவள் கேட்டிருக்கலாம். (May I ask you a question என்ற கேட்கக் கூடாது. Ask என்றாலே அது கேட்கப்படுவது என்பதைக் குறிக்கிறது).

My watch is not working என்பதைவிட my watch is not functioning என்பது சிறப்பாக இருக்கும்.

ஒரு கடிகாரம் ஓடவே இல்லை என்றால்கூட அது ஒரு நாளில் இரண்டு முறை சரியான நேரத்தைக் காட்டும். இதைத்தான் லதா நகைச்சுவையாகக் கூற, இருவருமாகச் சிரிக்கிறார்கள். ஆனால்ம் இதை “it shows the right time - twice a day” என்று லதா கூறியிருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x