Published : 17 Feb 2020 08:31 AM
Last Updated : 17 Feb 2020 08:31 AM
Weekly nature visits may boost physical, mental health: Study
London,
People who make weekly visits to natural spaces, and feel connected to them, report better physical and mental wellbeing, according to a study.
Researchers, including those from the University of Plymouth in the UK, also found that people who make nature visits are more likely to behave in ways which promote environmental health, such as recycling and conservation activities.
The study, published in the Journal of Environmental Psychology, suggests that reconnecting with nature could be key to achieving synergistic improvements to human and planetary health.
It is the first study to analyse the contribution of both contact of nature and connection to human health, wellbeing and pro-environmental behaviours, the researchers said.
"In the context of increasing urbanisation, it is important to understand how engagement with our planet's natural resources relate to human health and behaviour," said lead author Leanne Martin, from the University of Plymouth.
"Our results suggest that physically and psychologically reconnecting with nature can be beneficial for human health and wellbeing, and at the same time encourages individuals to act in ways which protect the health of the planet," Martin said.
These findings provide vital new insights of the need to not just increase contact with nature, but about the sorts of experience that really help people build an emotional connection, said Marian Spain, Chief Executive of Natural England, the UK government's adviser for the natural environment.-
PTI
உடல்-மன ஆரோக்கியத்துக்கு நல்லது வாரம் ஒரு முறை இயற்கை சுற்றுலா
லண்டன்:
இயற்கை எழில் கொஞ்சம் தலங்களுக்கு வாரந்தோறும் சுற்றுலா சென்று இயற்கையோடு ஒன்றி இருப்பவர்களின் உடல்நல
னும் மனநலனும் சிறக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதி செய்துள்ளது.
அடிக்கடி இயற்கை நிறைந்த சூழலுக்கு பயணம் செல்லும் பழக்கமுடையவர்கள் மறுசுழற்சி, இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட சூழலியல் ஆரோக்கியத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று பிரிட்டனில் உள்ள பிளைமவுத்பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவுகள் சூழலியல் உளவியல் என பொருள்படும் ‘என்விரான்மென்டல் சைகாலஜி’ ஆய்விதழில் பிரசுரமாகி இருக்கிறது. இயற்கையுடன் இயைந்து வாழ்வதன் மூலம் மனிதருக்கும் பூமி கோளுக்கும் நன்மை பயக்க முடியும் என்பதை இந்தஆய்வு உணர்த்துகிறது. இத்தகைய கோணத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முதல் ஆராய்ச்சி இதுவே என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிளைமவுத் பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் லேன்மார்ட்டின் கூறுகையில், “நாளுக்கு நாள்நகரமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் நடத்தைக்கும் பூமியின் வளங்களுக்கும் இடையிலான தொடர்பை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம்உள்ளது. இந்த கோணத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட போது உடலளவிலும் மனதளவிலும் இயற்கையோடு ஒன்றிப் போகும்போது மனிதர்களுக்கு நன்மை விளையும். அது மட்டுமின்றி புவி
யைப் பாதுகாக்கும் எண்ணமும் மனிதர்களுக்குள் துளிர்க்கும் என்பதைக் கண்டுபிடித்தோம்” என்று தெரிவித்தார்.
இயற்கையின் அழகை ரசிக்காமல் அதனுடன் உணர்வுப் பூர்வமான பற்றுதலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த ஆய்வு உணர்த்துவதாக இயற்கைச் சூழல் துறையின் அரசு ஆலோசகரும் இயற்கை இங்கிலாந்து அமைப்பின் தலைமை செயலதிகாரியுமான மரைன் ஸ்பெயின் குறிப்பிட்டார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT