Published : 11 Feb 2020 10:32 AM
Last Updated : 11 Feb 2020 10:32 AM
Hyderabad
India has made rapid strides in higher education but the quality of education is still an area of concern, said, Professor Anil D Sahasrabudhe, chairman, All India Council for Technical Education (AICTE). He was delivering the lecture in a campus in Hyderabad on “The Future of Management Education”.
Access, equity and quality of education are of paramount importance and the goal of education should be Enlightenment, Empowerment and Entrepreneurship, he said.Prof Sahasrabudhe further added that education needed to be all encompassing with equal importance given to curricular and co-curricular activities and institutions need to offer credits for co-curricular activities. Emphasising on curriculum revision, teacher certification and mandatory industry exposure for students, he said students need to inculcate reading skills, writing skills, speaking skills and listening skills.
He also said exam reforms is the need of the hour and the current exam pattern should move away from testing memory to one based on learning
objectives. He also suggested introducing a mandatory three-week student induction program which will help students from different backgrounds to learn from each other’s strengths and weaknesses. Faculty should play the role of facilitator and classroom teaching is here to stay as it enables peer learning and fosters human spirit, Prof Sahasrabudhe said.
‘இன்றைய உடனடி தேவை தரமான கல்வி’
உயர்கல்வியில் நீண்ட நெடிய பயணத்தை இந்தியா மேற்கொண்டு இருக்கிறது. ஆனாலும் கல்வியின் தரம் குறித்து நாம் பேச வேண்டி நிலை நீடிக்கிறது என்று அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே கூறினார். ‘மேலாண்மை கல்வியின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் நடை பெற்ற கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்திய
போது இதனை அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது:
எல்லோருக்கும் எட்டக்கூடிய வகையில், சமத்துவத்துடன் கூடிய தரமான கல்வி என்பதற்குத்தான் உச்சபட்ச முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மற்றும் ஞானம் அடைதல், அதிகாரப்படுத்துதல் தொழில்முனைவு ஆகியன கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பாடத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட கல்வி அல்லாத செயல்பாடுகளுக்கும் அளிக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் பிற செயல்பாடுகளுக்கு சிறப்பு புள்ளிகள் வழங்க வேண்டும். பாடத்திட்டத்தை புதுப்பித்தல், ஆசிரிய திறன் வளர்ப்பு, தொழிற்துறை அனுபவங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுடன் வாசித்தல் திறன், எழுதும் திறன், பேசும் திறன் கவனிக்கும் திறன் ஆகியவை மாணவர்களுக்கு ஊட்டப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
கல்வியை பல்துறை மையமாக்கும் முயற்சியில் புதிய கல்விக் கொள்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக பொறியியல் மாணவருக்கு கலை பாடங்களும் அறிமுகப்படுத்தப்படும். அதேபோன்று கலை பட்டப்படிப்பு மாணவருக்கு அறிவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தேர்வு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நினைவாற்றலை சோதிக்கும் முறையில் இருந்து கற்றலின் குறிக்கோளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேர்வு முறைக்கு நகர வேண்டும். ஒவ்வொரு மாணவரும் சக மாணவர்களின் பின்புலத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று வார கால தொடக்கப் பயிலரங்கம் நடத்தப்பட வேண்டும்.
இதன் வழியாக அவரவர் பலம், பலவீனம் ஆகியவற்றைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆசிரியர் இணக்கமான சூழலை ஏற்படுத்தும் பணியை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் சக மாணவரிடம் இருந்து கற்றறிதல் மற்றும் நுண்ணறிவை வளர்ப்பதுதான் இந்த செயல்பாட்டின் நோக்கமாகும். இவ்வாறு பேராசிரியர் அனில் சஹஸ்ர
புத்தே கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT