Published : 08 Jan 2020 12:19 PM
Last Updated : 08 Jan 2020 12:19 PM

மொழிபெயர்ப்பு: இதய நோய் சிகிச்சை 50 சதவீத பெண்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை

லண்டன்

Half of all women are given insufficient heart failure treatment: Study

London

Nearly half of all women suffering from cardiac arrest are given insufficient treatment, since heart failure in them -- unlike in men -- is not caused by a heart attack, but by untreated high blood pressure, a new study reveals.

According to the study, published in Nature Medicine, only 50 per cent of the heart failure cases among women are caused by having a heart attack, which can be treated with modern methods.

However, the researchers, including those from the University of Bergen in Norway, said the cause for heart failure in the other 50 per cent of women is generally related to having untreated high blood pressure levels over time, leading to progressive stiffening of the
heart.

There is no effective treatment for this kind of heart failure yet, the study noted."Men and women have different biologies and this results in different types of the same heart diseases. It is about time to recognise these differences," said study co-author Eva Gerdts from the University of Bergen.
As part of the study, the researchers compared common risk factors for heart disease, and how these affect men and women differently.

They focused on the sex differences in the effect of obesity, high blood pressure, and diabetes.One of the factors assessed by the researchers was the differential influence of obesity on heart failure between men and women. obesity also increases the risk of diabetes, with women facing a much higher relative risk of heart complications and death from the condition than men.

- PTI

இதய நோய் சிகிச்சை 50 சதவீத பெண்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை

ஆண்களை போல பெண்களுக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுவதில்லை. இருப்பினும் இதய நோயினால் பல பெண்கள் அவதிப்படக் காரணம் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்திற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதே. இதனால் 50 சதவீதப் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது புதிய ஆய்வு. ‘நேச்சர் மெடிசின்’ ஆய்விதழில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.

நார்வே நாட்டைச் சேர்ந்த பெர்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். அவர்கள் இது குறித்து அளித்த விளக்கம்:

இதய நோயினால் பாதிக்கப்படும் பெண்களில் 50 சதவீதத்தினருக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படுகிறது. நவீன சிகிச்சை முறை மூலமாக அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து குணப்படுத்திவிட முடியும். ஆனால், உயர் ரத்தஅழுத்த நோய் கவனிப்பாரற்று விடப்படுவதால்தான் 50 சதவீத பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படகிறது.

இதனால் இதயம் விறைப்பாக்கி ஒருகட்டத்தில் செயலிழந்து விடும் அபாயம் உள்ளது. இதுவரை இதற்கான மருத்துவத் தீர்வு கண்டறியப்படவில்லை. இந்த ஆய்வு குழுவைச் சேர்ந்த பெர்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஈவா கெர்ட்ஸ் கூறுகையில், “உடற்கூறுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளன. ஆகையால், ஒரேமாதிரியான இதய நோய் இருவரையும் தாக்கினாலும் அதன் விளைவு இரு பாலினத்தவருக்கும் வெவ்வேறாக இருக்கும். இந்த வித்தியாசங்களை அடையாளம் காண வேண்டிய காலம் இது” இவ்வாறு கூறினார்.

இதய நோய்கள் ஏற்படுவதற்கான பொதுவான அறிகுறிகளையும் அவை ஆண்கள் மற்றும் பெண்கள் மீது ஏற்படுத்தும் வித்தியாசமான விளைவு களையும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருபாலினத்தவர்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை உன்னிப்பாகக் கவனித்தனர்.

உடல் பருமன் காரணமாக இதய நோய் ஏற்படுவது ஆணுக்கு ஒரு விதமாகவும் பெண்ணுக்கு வேறு விதமாகவும் வெளிப்படுவதை கண்டுபிடித்தனர். உடல் பருமன் அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது. அதிலும் பெண்களின் உடல் பருமன் அதிகரிக்கும் போது இதய நோய்கள் தாக்கி மரணம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x