Published : 11 Dec 2019 08:32 AM
Last Updated : 11 Dec 2019 08:32 AM
ஜி.எஸ்.எஸ்.
பிரேமா, ராகினி ஆகிய இருவரும் மனவேறுபாடு காரணமாக சில நாட்களாக பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள். இந்தச் சூழலை மாற்றி மறுபடியும் ராகினியுடன் நட்பாக இருக்க விரும்புகிறாள் பிரேமா. அப்போது பிரேமாவுக்கும், ராகினிக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.
Prema – Raghini, can I talk with you?
Raghini – (surprised) Do you want to talk with I?
Prema – Yes. We will be friends again.
Raghini – Sure. I am happy. Let us hands shake.
Prema – Thank you. I miss your friendship when we were not talking.
Raghini – Same with me.
Prema – Let us not fight.
Raghini – Let us maintain piece.
மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.
மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
Do you want to talk with I என்பது தவறு. என்னோடு பேச விரும்புகிறாயா என்பதை Do you want to talk with me என்றுதான் கேட்க வேண்டும்.
ராகினி, let us hands shake என்கிறாள். நாம் கைகுலுக்குவோம் என்பதை let us shake hands என்று கூறியிருக்க வேண்டும்.
I miss your friendship when we were not talking என்கிறாள் பிரேமா. இருவரும் பேசாமல் பகைமையோடு இருந்த காலத்தில் தங்களது நட்பு தொடராததற்காக வருத்தப்பட்டதைத்தான் அவள் இப்படிக் குறிப்பிடுகிறாள். கடந்த காலத்தில் அவளுக்கு இருந்த உணர்வு (இப்போதுதான் மீண்டும் நண்பர்கள் ஆகிவிட்டார்களே). எனவே அவள், I missed your friendship when we were not talking என்று கூறியிருக்கலாம்.
Let us maintain piece என்பது தவறு. Piece என்றால் துண்டு. A piece of cake என்பதுபோல. அமைதி அல்லது சமாதானத்தைக் குறிக்கும் வார்த்தை peace. Pea என்பது பட்டாணியைக் குறிக்கும். Peanut என்பது வேர்க்கடலையைக் குறிக்கும் வார்த்தை (இந்தியாவில் இதை groundnut என்றும் அழைத்துப் பழகிவிட்டோம்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT