Published : 10 Dec 2019 08:27 AM
Last Updated : 10 Dec 2019 08:27 AM

மொழிபெயர்ப்பு: புத்தர் வாழ்க்கை குறித்து சித்திரவடிவில் புத்தகம்

புதுடெல்லி

Abanindranath Tagore's book tracing Buddha's journey now in English

New Delhi,

Dec 8 (PTI)

A book by Rabindranath Tagore's nephew Abanindranath which parallelly examines the journey of the Buddha through various stages of his life as well as that of a young village lad has been translated into English.

Nalak in its English translation has no chapters. Another feature is a bunch of new illustrations in the pen-and-ink style.

The illustrations present a well-researched theme, apparently inspired by the style of Buddhist tankha paintings while depicting the details of clothing, environment, buildings, paths and gardens, cities and villages, mythical figures, animals, objects and people.

The illustrations along with the lyrical narrative also trace the restless spirit of Nalak, who cannot put his mind to school work and feels imprisoned at home.

Abanindranath literally paints pictures, taking readers through the story of Nalak's coming-of-age and his quest and meditation for finding Buddha.

There is a complete merging of timelines here, when Nalak's childhood and years of youth capture prince Siddhartha's transition from a newborn to a full-grown man, a husband and a father, in a time capsule very deftly.

Nalak yearns to meet and forever remain with Buddha; he travels in a surreal world of sorts, taking Buddha's journey along with him.

Abanindranath was an artist and writer and as the principal innovator of the Bengal school of art, he created a distinctive Swadeshi style of art at a time when only western models were being imitated and practised in contemporary India.- PTI

புத்தர் வாழ்க்கை குறித்து சித்திரவடிவில் புத்தகம்

புதுடெல்லி:

ரவீந்திரநாத் தாகூரின் மருமகனான அபநிந்திரநாத் தாகூர் எழுதிய வங்கமொழி நாவல் ‘நாலக்’. இது ஆங்கிலமொழிபெயர்ப்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புத்தர் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட பல கட்டங்களையும் ஒரு இளம் கிராமத்து இளைஞனின் வாழ்க்கையையும் மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

கோட்டுச்சித்திர வடிவில் ‘நாலக்’நாவலில் பல சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆடைகள், சுற்றுப்புறம், கட்டிடங்கள், பாதைகள், தோட்டங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள், புராண கதாபாத்திரங்கள், விலங்குகள், பொருட்கள் மற்றும் மனிதர்கள் என இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சித்திரங்கள் அனைத்தும் ‘தாங்கா’ எனப்படும் பெளத்த ஓவிய முறைப்படி வரையப்பட்டுள்ளன.

இருப்புக்கொள்ளாமல் தவிக்கிறான் நாலக். அவனால் பள்ளி படிப்பிலும் ஒன்றமுடியவில்லை வீட்டிலும் சிறைபிடித்து வைக்கப்பட்டது போல உணருகிறார். இப்படி நாலக்கின் கதையைகவித்துவமாக விளக்கப்படங்களுடன் விளக்குகிறது இப்புத்தகம்.

புத்தரையும் புத்தரின் மனப்பக்குவத்தையும் தேடித் திரியும் நாலக்கின் கதைக்குள் வாசகர்களை தன்னுடைய தத்ரூபமான சித்தரிப்பின் வழியாக இழுத்துக்கொள்கிறார் அபநிந்திரநாத்.

இரு வேறு காலகட்டங்களும் சங்கமிக்கும் அம்சங்கள் இந்த நாவலில் காணப்படுகிறது. சித்தார்தனனின் பிறப்பிலிருந்து அவர் வளர்ந்து, திருமணம் புரிந்து கணவராகி, தந்தையாகும்வரை நாலக்கின் சிறுபிராயமும் இளமை பருவமும் ஒத்துப்போகும் விதமாக கதை புனையப்பட்டிருக்கிறது. எப்படியாவது புத்தரை சந்தித்து அவருடன் தங்கிவிட வேண்டுமென நாலக் ஏங்குகிறான். மாயாஜால உலகில் பயணம் செய்து புத்தர் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட அத்தனை நிலைகளையும் நாலக்கும் கடக்கிறான்.

இத்தகைய நாவலின் ஆசிரியரான அபநிந்திரநாத் எழுத்தாளரும் ஓவியருமாவார். வங்காள நுண்கலை பள்ளியை நிறுவியது இவர்தான். மேற்கத்திய கலை பாணிகள் மட்டுமே கோலோச்சிய காலகட்டத்தில் இந்திய மண்ணில் கலை வடிவத்தை உருவாக்கியவர் இவர்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x